Thursday, January 26, 2012

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்..!!

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் சூல் கொண்டு வளரவே பத்து மாதங்கள் தேவை என்ற நிலையில் இந்தியா என்பது பல கனவுகள் இணைந்த ஒரு concept. கண் மூடி கண் விழித்ததும் அதிசியங்கள் ஏதும் நிகழும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. குடியரசு தினத்தன்று இந்தியா இருப்பை பழித்தும், கேள்விக்கு உட்படுத்தியும் பல நிலை தகவல்களை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்நிய ஆட்சிக்கு உட்பட்டு இருந்த நமது முன்னோர்கள் என்றாவது ஒரு நாள் ... ஏன் சந்ததியினர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பர் என்ற நம்பிக்கையுடன் மரித்திருப்பர். அவர்கள் நம்பிக்கை நனவானது தானே வரலாறு. அதே போன்று நாம் வாழும் இந்த நாடும் என்றாவது ஒரு நாள் இன்னும் செம்மையாக மாறும் என்ற கனவுடன் தொடருவோம். தனி தமிழ் நாடு கோரிக்கைகள் பேசுவோர் சிந்திக்க வேண்டியது, அப்படி பெறும் தனிநாட்டில் சரி பாதி மாவட்டங்கள் (மாநிலங்கள் ?) எல்லைப்புற மாவட்டங்களாக இருக்கும், இந்த யோசனையே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. அமைப்பை மாற்ற ஒரே வழி அமைப்புக்குள் இருந்து வலுவாக போராடுவதே, அமைப்பில் இருந்து வெளியேறி போராடுவது அல்ல.

Courtesy & Thanks to Vijaya Lakshmi



நம்மை நேசிக்க சக மனிதர்களிடம் அன்பு மீதம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே விழித்து எழுந்தோம்.
அதே எதிர்ப்பார்ப்புடன் நம்மை எதிர்நோக்கும் சக மானிடர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்துவோம்.
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே .....!!

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.