Thursday, January 19, 2012

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல

பாடல்: எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
படம்: சின்னக் கண்ணம்மா
வருடம் : 1993
வரிகள்: பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
இசை: இளையராஜா

--------------------------------------------

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உண் பூவிழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்க சிலையே

தாயின் மடி சேரும் கன்று போல
நாலும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தால் காதல் தேவி
உறவின் பலனாக கடலின் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே
காண கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிகின்ற வைரமே
கோடி கொடுத்தாலும் உன்னை போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உண் பூவிழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

3 comments:

  1. இதில் ஜானகியே கிடையாது
    வரிகள் வாலி
    சரியாக தெரிந்து கொண்டு பதிவு போடவும்

    ReplyDelete
    Replies
    1. நான் கூகுளை தேடி பார்க்கும்போது இது தான் எனக்கு கிடைத்த தகவல். அதனால் அதை பகிர்ந்தேன். வரிகள் பஞ்சு அருணாச்சலம் என்றே 2, 3 தரவுகளில் பார்த்தேன்.. நீங்கள் எப்படி வாலி என்று சொல்கிறீர்கள் ?

      Delete

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.