Saturday, January 14, 2012

போனபொங்கலில் நீயாரோ நான் யாரோ..!

தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட பொருள் பொதிந்த சிந்தனை கவிதை.

Courtesy & Thanks to Mylswamy Annadurai (Who wrote & Shared this)

போனபொங்கலில் நீயாரோ நான் யாரோ
இந்தப் பொங்கலில் நீவேறோ நான்வேறோ
என்னுடன் புதிதாய்ச்சேர்ந்த பெயர்களில்
உன்பெயரும் சேரும்

முகம் தெரியா உறவுகள்
முகநூலால் அறிமுகம்

முகநூலில் அறிமுகம்

முகச் சிரிப்பில் பலரும்
முகம்மூடிப் பலரும்

நேசம் தேடிப் பலரும்
நேரம் போக்கப் பலரும்

எழுதிப் பார்க்கப் பலரும்
எழுத்தைப் பார்க்கப் பலரும்

உலகம் அறியப் பலரும்
உலகம் புரிந்த பலரும்

உண்மை அறியப் பலரும்
உண்மை அறிந்த பலரும்

உலகைப் போற்றப் பலரும்
உலகம் போற்றும் பலரும்

உவகைக்காகப் பலரும்
உவகை கொண்டோர் பலரும

என்னைத் தேடிப் பலரும்
என்னில் தேடிப் பலரும்

என்னை ஒதுக்கிய பலரும்
என்னுள் ஒதுங்கிய பலரும்

கண்ணில் பார்க்கா நட்பாய்
கணிணி சேர்க்கும் நட்பாய்

உலகம் பலதாய்ப் பிரிந்தும்
ஒன்றாய்ச் சேரும் இடமாய்
முகநூல் இருக்க மகிழ்ந்தேன்
மனதில் பொங்கும் உவகை
மாட்டுப் பொங்கலாய் அறிவாய்

- அன்புடன்
மயில்சாமி அண்ணாதுரை

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.