பாடல்: ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
திரைப்படம்: காவிய தலைவி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1971
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேன்
கனவோ நனவோ சொல் என்றேன்
கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
என் கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்....
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.