Saturday, September 25, 2010

வெள்ளைப் பூக்கள்....

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
---------------------------------------------------------------
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே!
மலரே சோம்பல் முறித்து எழுகவே!
குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கத கதப்பில்,
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்.....
(வெள்ளை)
காற்றின் பேரிசையும், மழை பாடும் பாடல்களும்,
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ?
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்,
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ?
(வெள்ளை)
எங்கு சிறு குழந்தை, தன் கைகள் நீட்டிடுமோ,
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ,
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!
(வெள்ளை)

1 comment:

  1. நன் மெய் மறந்து ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ...!!

    ReplyDelete

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.