
சாலையின் மேனியில்
தொழு நோய்...
யாரங்கே குப்பை கொட்டியது
சுத்தம் சோறுபோடும்
அடிப்பாவி சோறுபோட்டு
சுத்தத்தை கெடுத்திருக்கிறாயே
சாலையில்
வாயில் முள்
வாய்க்காளில் பிளாஸ்டிக்
ஒன்றென்று
எப்போதறிவாய்
அதோப்பார்
அந்த கிராமத்துக்கிளி
தொழுவத்தைக்கூட
தொழுமளவுக்கு வைத்துள்ளாள்
நீ
நகரத்தை நரகமாக்கி வருகிறாயே
வீடும் வீதியும்
ஒன்றென கருதினால்
நாடும் நாமும்
நலந்தான்...! நலந்தான்...!
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.