நன்றி : Viji Senthil
கணவரின் கல்லூரி நண்பனது வரலாறு இது.
நண்பர் சாமுவேல் போச்சம்பள்ளி என்ற சிறு நகரத்திற்கு அருகில் உள்ள p.ராஜனூர் என்ற மிகச் சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.விவசாய குடும்பம் என்றாலும் தந்தை ஒரு அரசு ஊழியர்.சாமுவேல் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.பின்பு தனி தேர்வு முறையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று +1 சேர்ந்தார்.திடீர் என கல்வி மேல் கடும் வெறுப்பு கொண்டு படிப்பை துறந்து தனது கனவு உத்யோகமா...ன லாரி டிரைவர் ஆகும் முயற்சியில் இறங்குகிறார்(விவேகானந்தரும் வண்டி ஒட்டி ஆவதை லட்சியமாக வைத்து இருந்தது இங்கு ஒப்பு நோக்க தக்கது). ஓட்டுனர் ஆக விரும்பியவரை driving school இல் சேர தந்தை அறிவுறுத்த இனி school க்கு செல்ல மாட்டேன் எனபது எல்லா school க்கும் பொருந்தும் என்று அறிவித்து விட்டு லாரி கிளீனர் ஆக பணியேற்று இந்தியா முழுக்க இரு வருடங்கள் இடைவிடாது சுற்றுகிறார்.ஒரு நல்ல நாளில் அதுவும் சலித்து மீண்டும் பள்ளிக்கு திரும்ப உத்தேசிக்கிறார்.வாழ்க்கை பாடம் சொல்லி தந்து இருக்க வேண்டும்.நண்பர் +2 தேர்ச்சி பெற்று திருச்சியில் உள்ள ஒரு புகழ் பெற்ற கிருஸ்துவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேருகிறார்.ஏட்டு சுரைக்காய் கல்வி.நண்பரும் கல்வியில் அவ்வளவு கரை கண்டவர் இல்லை.சில பல arrearsகளுடன் கல்லூரியில் இருந்து வெளி வருகிறார்.நண்பரின் பொழுதுபோக்கு ஓவியம்.திடீரென samuvel,வியாபாரத்தில் ஈடுபட முடிவு எடுத்து வாசனை புகையிலை-haans- விற்கும் மிகச் சிறு வியாபாரி ஒருவரிடம் நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்கிறார்.அந்த வேலையும் 6 மாதத்தில் சலித்து விட,மீண்டும் திருச்சி வந்து arrears கிளியர் செய்கிறார்.சென்னைக்கு செல்ல வேண்டும் எனபது நண்பரின் சிறு வயது கனவு.மேல் படிப்பை சாக்காக வைத்து வீட்டில் பணம் வாங்கி கொண்டு சென்னை வந்தவர் இங்கு உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ.ஆங்கில இலக்கியம் சேருகிறார்.பொழுதுபோக்குக்கு web designing கம்ப்யுட்டர் கோர்ஸ் ஒன்றில் சேர்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு:
நண்பர் சாமுவேல் பெங்களூருவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் ரூபாய் 70000 /-சம்பளத்தில் web designer ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறார்.மனைவி இரு குழந்தைகள்.சொந்த வீடு,வாகனங்கள் என அழகான வாழ்க்கை.
நீதி : தெருமுனையில் நமக்காக காத்து இருப்பது நம்மை கடிக்க இருக்கும் நாயாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை,மாலை போட்டு வரவேற்கும் யானையாகவும் இருக்கலாம்.
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.