Tuesday, March 31, 2015

ஸ்பரிசம்


நன்றி  -►   இந்திரா கிறுக்கல்கள் 

Courtesy & Thanks (Source)  :  FB_LinkBlog_Link

ம.வே.சிவகுமார் எழுதிய ‘ஸ்பரிசம்’  சிறுகதை படிக்க நேர்ந்தது. ஒற்றைச் சம்பவத்தைஅடிப்படையாக்க் கொண்ட மிகச்சிறிய கதையெனினும், படித்து முடித்தபின் வெகுநேரமாய்யோசிக்க வைத்தது.

கதையானது.. சிறுவயது முதலே தந்தையால் மிகுந்த கண்டிப்புடன்வளர்க்கப்படும் ஒருவன், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க ஊருக்குச்செல்கிறான். ரயிலேற்றிவிடும் தகப்பனார் அவன் கைகள் பற்றியபடி இருநூறு ரூபாய் தந்துஅறிவுரைகூறி வழியனுப்புகிறார். அந்த ஒரு சிறு ஸ்பரிசத்தில் தன் பழைய நினைவுகளைப்புரட்டியபடி பயணம் செய்கிறான் அவன். உறவுகளுக்குள் என்னதான் பிணைப்பிருந்தாலும்,ஒரு கட்டத்திற்குமேல் தொட்டு ஸ்பரிசிக்க முடிவதில்லை என்பதை அந்த உள்ளங்கைசூட்டில் உணர்கிறான்.

குழந்தையை முதன்முதலாய்த் தூக்கி உச்சிமுகரும்போது, இன்னும் சிலகாலத்திற்குப்பின் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று யோசித்தவாறேமுத்தமிடுகிறான். அதே நேரம், ஊரில் அம்மாவிடம் அப்பாவும் இதையேசொல்லிக்கொண்டிருப்பதாக கதை முடிகிறது.

கதையம்சம் சாதாரண சம்பவம்தானெனினும் உட்கருத்து என்னவோ மனதைஅழுந்தச்செய்கிற உண்மை.

கடைசியாக என் அப்பாவின் உள்ளங்கை சூடு எப்போது உணர்ந்தேன்?? என்தாயின் உச்சிமுத்தம் எப்போது கிடைக்கப்பெற்றேன்? சகோதரியின் தோள் தட்டிகட்டிப்பிடித்த்து நினைவிலேயே இல்லாமல் போய்விட்டது..

வாழ்வில் ஸ்பரிசம் என்பது மிக முக்கியமானது. ஒரு தொடுகை நிகழ்த்திவிடும்அற்புதம், அலாதியானது. கட்டிப்பிடித்து இதழ் கவ்வுதும், புணர்வதும் மட்டும்ஸ்பரிசமாகாது. காய்ச்சலடிக்கும்போது அக்கறையாய் நெற்றி தொட்டுப்பார்ப்பது கூடஸ்பரிசம் தான். நட்புக்களில் அனிச்சையாய் கரம்பிடித்துப் பேசுதல் கூட சலனமில்லாஸ்பரிசம் தான்..!

குழந்தைப் பருவத்தைக் கடந்தபின் யாருமே எட்டி நின்று நலம்விசாரிப்பதோடு சரி..! அருகமர்ந்து பேசும்போது கைபிடித்து, விரல்கோர்த்துப் பேசும்காதல் உறவில்கூட, குறிப்பிட்ட வயதிற்கு அல்லது காலத்திற்குப்பின் இவ்விடைவெளிதோன்றிவிடக்கூடும்.

ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும்சார்ந்தது..!

நீங்கள் கடைசியாய் எப்போது உங்கள் தந்தையின் கரம் பிடித்துப்பேசுனீர்கள்?






Friday, March 27, 2015

நீ எனக்கு

Nandri : இந்திரா கிறுக்கல்கள்

Source : http://chellakirukkalgal.blogspot.com/2010/06/blog-post_14.html

 






பிறவிக் குருடனுக்கு கிடைத்த ஐந்து நிமிடப் பார்வை - நீ

பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தாயின் முத்தம் - நீ

தூக்குக் கைதிக்கு நிறைவேற்றப்படும் கடைசி விருப்பம் - நீ

திருந்தியவனுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு - நீ

தொடர் தோல்விக்குப் பின் பெறும் முதல் வாய்ப்பு - நீ

அடைமழையில் சிறுவன் பொறுக்கும் ஆலங்கட்டி - நீ

பதில் எதிர்பார்க்கும், தெரிவிக்கப்பட்ட ஒரு தலைக் காதல் - நீ

விதவை நினைவிலிருக்கும் காதல் வாழ்க்கை - நீ

முதல் பதவியை தவறவிட்ட ஒற்றை மதிப்பெண் - நீ

அடிமை வேலைக்கு கிடைத்த விடுமுறை நாட்கள் - நீ

முத்துக் குளிப்பவன் அடக்கும் ஆழ மூச்சு - நீ

திரும்பக் கிடைத்த தொலைந்த சான்றிதழ் - நீ

பாலைவன மணல் மீது விழும் சிறு தூரல் - நீ

யுகங்கள் தவமிருக்கும் யோகிக்குத் தெரியும் ஜோதி - நீ

சிறுமியின் புத்தகம் நடுவிலிருக்கும் ஒற்றை மயிலிறகு - நீ

அன்னை ரசிக்கும் மழலையின் உறக்கப் புன்னகை - நீ

நாளிதழில் பரீட்சை எண் தேடும் மாணவப் பதற்றம் - நீ

தனிமையில் நினைவலைகள் சிந்தும் கண்ணீர்த்துளி ௦- நீ

சந்தித்த தோழர்களுக்கு இடையே நிகழும் முகமலர்ச்சி - நீ

பேச ஏங்கிய தோழியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு - நீ

என் வாழ்வின் வசந்த கால அத்தியாயங்களின் தொகுப்பு - நீ

Monday, March 16, 2015

எந்தன் பொன் வண்ணமே


படம்       :    நான் வாழவைப்பேன்
இசை     :    இளையராஜா
பாடியவர்கள்    :  டி.எம்.சௌந்தர்ராஜன்
பாடலாசிரியர்  :  கண்ணதாசன்
டைரக்சன்    :     டி.யோகானந்த்


-----------------------

எந்தன் பொன் வண்ணமே
அன்பு பூ வண்ணமே
எந்தன் பொன் வண்ணமே
அன்பு பூ வண்ணமே
 நெஞ்சில் போராட்டமா
கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா
மனம் தான் தாங்குமா

கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கு நீ இல்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை ;
உந்தன் வார்த்தை இல்லையென்றால் கீதம் இல்லை

நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு    (எந்தன் பொன் வண்ணமே...)

பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லையென்றால் நானும் எங்கே செல்வேன்

தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு      (எந்தன் பொன் வண்ணமே...)

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை;
நீ கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும்; அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்

காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு       (எந்தன் பொன் வண்ணமே...)

----------------------------

For details on the movie/song background and sequence please refer to this below link

http://mayyam.com/archives/showthread.php?3-SIVAJI-SEASON-ENDHAN-PON-VANNAME

Saturday, March 14, 2015

உண்மையில் காதல் என்பது


நன்றி : சரண்யா செல்வநாதன்  ( FB : சரண்யா செல்வநாதன்  )

Courtesy & Thanks (Source) :
https://www.facebook.com/shaliny.sara?fref=ts

உண்மையில் காதல் என்பது என்ன?

கண்ணை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
பார்வை இல்லாதவர்களுக்க ு காதல் வராதா?

நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
கருப்பானவர்களுக ்கு காதல் வராதா?

அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?

பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா?

இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
இடமில்லாதவனுக்க ு காதல் வராதா?

பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால் பேச
இயலாதவனுக்கு காதல் வராதா?

படிப்பை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் படிக்காதவனுக்கு காதல் வராதா?

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்
ஒரு இதயத்திற்கு உண்மையான
அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ அங்கு உருவாகும்
ஒரு உன்னதமான உறவுக்கு
பெயர் தான் "காதல்"!!

----------------------------------------------

இந்த கவிதைக்கு பொருத்தமான காணொளி என்று  நினைக்கிறேன் இதை


-------------------------------------------

இந்த பதிவை படித்தால் காணொளியை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்

நன்றி :  tamilsvoice.com

Courtesy & Thanks (Source) :  http://www.tamilsvoice.com/archives/36285


என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட (Parallax) முன்னாள் போராளி தனது உயிர் பிரியும் நேரத்தில் கூறிய வார்த்தை இது!

March 8, 2015

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் 06.03.2015 அன்று மரணமடைந்தார்.இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச்சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால் இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார். முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.

தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.

முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார். நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.

நல்லுள்ளம் கொண்ட அன்பர்களே! முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் , தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு: 0094 7744 92555, 0094 7765 22735


ltte