Tuesday, June 18, 2013

சின்ன வயசுல நான்

நன்றி : களவாணி பய & சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?



1.புஸ் ஆன பட்டாச எடுத்து பேப்பர்லாம் கிழிச்சு அந்த தூள எடுத்து பத்த வச்சு புஸ்ன்னு எரியும் அத பாத்து சந்தோசப்பட்டது

2.வீடுகட்ட கொட்டுன மணல்ல.. பல வீடு கட்டிருக்கேன்

3.மயில் இறகு குட்டி போடும்-னு ஷார்ப்நற் துல தீனியா போட்டு புக்-ல வளர்ப்போம்

4.யாராவது காலை தாண்டி போனா வளர மாட்டேன்னு நினைச்சேன்

5.சைக்கிள் ஓட்டக் கத்துக்கும் போது நான் இடிச்ச பக்கத்து வீட்டு கிழவி ஆறாவது நாள்ல டிக்கெட் வாங்கிடுச்சு

6.பள்ளி மதிய உணவு முடிந்து செல்லும் போது அக்ரஹார வீட்டு calling bell அடித்து எழுப்பி விட்டு ஓடிவிடுவேன்

7.உங்க வீட்டுக்கு பாம்பு வரும் சிலேட்டு குச்சி போடுன்னு பொம்பள புள்ளைகள பயமுறுத்தினேன்

8.டீச்சர் அனைவரையும் சுட்டு விட்டு நாம் மட்டும் இருந்தால் என்னாகும் என்று கேட்டு headmistress வந்து enquiry நடத்தினார்

9.கட்டிப்பிடிச்சி தூங்குனா குழந்தை பிறந்துடும்னு நினைச்சேன்

10.White & white உடையில் தலை விரிகோலத்துடன் புகைக்கு நடுவில் வருவது தான் ஆவி என்று நம்பியது

11.எழுத்தாளர் சுஜாதான்னா ஒரு பொண்ணுன்னு நெனச்சேன்

13.சிலேட்டு குச்சி சாப்பிட்டுருக்கேன்

14.எங்க மாத்ஸ் டீச்சர் வண்டி பஞ்சர் பண்ணது

15.ஈவில் டெட் படத்தப் பாத்துட்டு நைட்டு உச்சா வந்தா கூட பயத்துல எந்திரிக்க மாட்டேன்

16.நீராருங் கடலொடுத்த பாடும் போது கண்ண மூடினே இருப்பேன் தொறந்தா மிஸ் அடிப்பாங்கனு பயம்.

17.பலமுறை வானத்தையே பார்த்துட்டு இருந்தேன் ‘சக்திமான்’ வருவார்னு!

18. பரீட்சை காலையில் மட்டும் திடீர் பக்தி பிரவாகம்

19.exam கு சரியா படிக்கலன்னா இன்னிக்கு CM அல்லது PM போய் சேர்ந்துடனும்னு வேண்டிக்குவேன்!

20.கெட்ட வார்த்தை கேட்டாவே காதை பொத்திக்குவேன்

21.அன்வர் 194 அடிச்சப்ப பொரண்டு பொரண்டு அழுதேன்

22.சச்சின் அவுட் ஆனா அழுவேன் ..

23.தேர்வுக்கு முந்தைய நாள் இரவு சாமி படத்துக்கு முன்னாடி பென்சிலை வைத்து பவர் ஏற்றி எடுத்துச் சென்றிருக்கிறேன்

24.இந்தியா வும் ,பாகிஸ்தான் ஒன்னு சேர்ந்துடணும் , அப்றோம் பாரு டா இந்த ஆஸ்திரேலியாவ எப்புடி அடிப்போம் னு யோசிச்சன்.

25. Aeroplane அ கொஞ்சம் கீழ பறக்க வெச்சா நாம வீடு மொட்ட மாடிலையே எறங்க வேண்டிய வங்கலாம் எறங்கிடலாம்ன்னு நெனச்சேன் ..


26. உடும்பு பிடிச்சா, 7 கழுத கத்தினாதான் விடும்னு நம்பினேன்

27.ஊசிப் போடுற டாக்டரை ஒரு வாட்டி கடிச்சது ..

28.விளம்பரத்துக்காக ஆட்டோவில் தரும் நோட்டீஸை விடாமல் விரட்டிச் சென்று வாங்கியிருக்கிறேன்

29. “தலைவலி” எப்டி இருக்கும்னு தாத்தாகிட்ட கேட்டு அவருக்கே தலைவலி வர வச்சுட்டேன்

# இவ்வளவும் பொறுமையா படிச்சீங்களே, இதுல  நம்பர் பாயின்ட் காணோமே கவனிச்சீங்களா.. அது என்னனு தெரிஞ்சுக்கணுமா..? சரி வேணாம் விடுங்க, எதுக்குங்க பிரச்சன...

2 comments:

  1. Hari .. Super ah iruku. I laughed while reading at it..

    Keep writing.

    ReplyDelete
  2. Thank you :) For this you should say keep sharing...Sure.. i will do :)

    ReplyDelete

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.