Thursday, April 7, 2011

பொன்னியின் செல்வன் முற்றும்......



பொன்னியின் செல்வன் முற்றும்......


நான் என் கல்லூரி நாட்களுக்கு பிறகு நீண்ட நாட்கள் (சுமார் நான்கரை ஆண்டுகள் ) கழித்து 'அமரர் கல்கி' அவர்களின் இந்த அருமையான நாவெல் படிக்கலானேன்...... சங்ககாலத்து சோழநாட்டிலே புவி சக்கரவர்த்தி சுந்தர சோழர் நாட்டிலே சில காலம் வாழ்ந்து விட்டு வந்திருக்கிறேன் ... என் அடிநெஞ்சில் பதிந்துவிட்ட ஒரு அருமையான வரலாற்று நாவல் இந்த 'பொன்னியின் செல்வன்'... இதில் வந்த வல்லத்து இளவரசர் வந்தியத்தேவரும் , இளைய பிராட்டி குந்தவையும் , சுந்தர சோழ சக்கரவர்த்தி, அனிருத பிரமராயர்,அருள்மொழி வர்மரும் (பொன்னியின் செல்வனான ராஜா ராஜா சோழரும் ), அவர் அருமை காதலி கொடும்பாளூர் இளவரசி வானதியும், இன்னமும் பளுவேடையர்களும், நந்தினியும் , சேதன் அமுதனும் (உத்தம சோழன்), அவர் காதலியும் பட்டமகிஷி பூங்குலழியும் , ஆழ்வார் கடியனும் , மலையமானும், கந்தமாறனும் , மணிமேகலையும் இந்த அருமை கதையின் மூலமாக என் நெஞ்சில் என்றும் தங்கிவிட்டார்கள்...

அமரர் கல்கி'கு என் நன்றிகளை காணிக்கை ஆகுகிறேன் .....

http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan

Update on : 21.07.2013

அமரர் கல்கி அவர்களின் அமர காவியமாகிய பொன்னியின் செல்வன் ஒரு ஒலிப்புத்தகமாக வெளிவந்துள்ளது.தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புத்தகம் படித்த பிறகு தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று கட்டாயம் அனைவருக்கும் தோன்றும்.
 


வந்தியத்தேவன், குந்தவை, ராஜ ராஜ சோழன், பழுவேட்டரையர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் அனைவரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகும். உண்மை நிகழ்வுகளோடு அங்கங்கு கதை சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் என்றும் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.
 


இந்த கதாபாத்திரஙகளையும் நடந்த சம்பவஙளையும் நம்மால் கண்ணால்தான் பார்க்க மூடியாது ஆனால் கேட்கவாது செய்யலாமே என்ற் ஆசையில் உருவானதுதான் இந்த ஓலிப்புத்தகம். 2000 க்கும் மேற்பட்ட பக்கஙகள் 15க்கும் மேற்பட்ட பாடல்கள். எல்லாவற்றையும் தொகுத்து ஒரு 78 மணி நேர ஒலிப்புத்தகமாக வெளியிட்டுள்ளோம் 60க்கும் மேற்பட்ட நாடக தொலைகாட்சி கலைஞர்கள் இந்த கதாபாத்திரங்களுக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள்.மறக்க முடியாத இந்த மாந்தர்கள் தங்கள் முன்னால் ஒலி வடிவில் வலம் வரப்போகிறார்கள்.

 

பின்னணி இசையும் மற்ற விசேஷ ஒலிகளும் உங்களை சோழர்கள் காலத்திற்கே 1000 வருடங்கள் பின்னால் அழைத்துப் போகப்போகின்றன.

தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கும் புத்தகம் படிக்க நேரம் இல்லாதவர்களுக்கும், இப்படிப்பட்ட ஒரு ஒலிப்புத்தகம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.
 

மேலும் பலர் இந்த சரித்திர நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடி அலைகிறார்கள் கல்கி அவர்களின் எழுத்தை தமிழில் படித்தால்தானே சுவை. அவரது எழுத்தின் வன்மைதானே இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் ஆகையால் ஒரு தமிழ் புத்தகத்தை தமிழிலேயே கேட்டுப்பயன்பெறலாமே!

இந்த ஒலிப்புத்தகம் MP3 FORMATல் 3 DVD களில் பதிவு செய்யப்பட்டு வெளிவருகிறது
 


பாடல்களுக்கு திரு சத்யசீலன் இசை அமைத்துள்ளர்

திறமை மிக்க தொழில் கலைஞர்கள் இதன் ஒலிப்பதிவில் உறுதுணையாக இருந்து மிகச் சிறப்பாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
 


ஆன்லைனில் வாங்க: http://www.nammabooks.com/cd/Ponniyin-Selvan-Audio-Book 
 
-Ravishangar vijayakumar
 

Wednesday, April 6, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!


ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..




இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக

கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் உங்கள் நினைவிற்கு..



குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது


- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.



இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.



நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!